Sunday, August 21, 2011

சென்னை -372

வணக்கம் சென்னை. இன்று 372 வது பிறந்தநாள் காணும் சென்னைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை, எத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த, கொடுக்கப்போகும் சென்னை.

1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்ப நாயக்கரிடமிருந்து இந்த இடத்தை கிழக்கிந்திய கம்பனியின் வணிகர்கள் Francis Day மற்றும் Andrew Cogan வணிகம் செய்வதற்காக வாங்கினர். அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பின்பு ஒரு வருடம் கழித்து இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இங்கிருந்து ஆங்கிலேயர்கள் வணிகம் செய்து வந்தனர். கொஞ்சகாலம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலும் மெட்ராஸ் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கினர். தற்போதைய தமிழ்நாட்டுடன் ஆந்த்ரா, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசாவில் இருந்து கொஞ்சம் பிச்சு பிச்சு சேர்த்தால் பழைய சென்னை மாகாணம் கிடைக்கும்.சுதந்திரம் அடைந்த பிறகு, மெட்ராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது தற்போதைய தமிழ்நாடு. 1968இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996இல் மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. எத்தனையோ மாற்றத்திற்கு பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சென்னை.

சென்னை தற்போது என் போன்ற பலரின் வாழ்கையின் ஒரு முக்கிய பகுதியாகிவிட்டது, எனக்கு உலகின் நுழைவாயில் போன்றது சென்னை, சென்னை பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கிறது, இன்னும் நிறைய கற்றுக்கொடுக்கும். சென்னையும் நமக்கு ஒரு ஆசனாகிவிட்டது. இன்னும் பலருக்கு வாழ்க்கை தரப்போகும் சென்னை மாநகருக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment